உதட்டுப்பிளவு சத்திரசிகிச்சைகளிற்கு உதவ முன்வந்தார் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் சகோதரங்களை இழந்தவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த நபர் ஒருவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவரே இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவ முன்வந்துள்ளார்.

அமெலி டானியல் லின்சே மன்றத்தை அமைத்துள்ள டேவிட்லின்சே இலங்கையில் உதட்டுபிளவு கிசிச்சைகளை முன்னெடுப்பதற்காக நிபுணர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் காலியில் இடம்பெறும் உதட்டுப்பிளவு மாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.பின்னர் நுவரேலியாவில் உதட்டுப்பிளவு சிகிச்சை தொடர்பில் சத்திரகிசிச்சை நிபுணர்களிற்கு உதவஉள்ளனர்.

டேவிட் லின்சே சுகாதார இராஜாங்க அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் போது உயிரிழந்த தனது சகோதரர்கள் அமெலி மற்றும் லின்சேயின் நினைவாக அமைப்பொன்றை டேவிட் உருவாக்கியுள்ளார்,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.