ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் கொள்கை ரீதியில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது – ராஜித சேனாரத்ன

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் கொள்கை ரீதியில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுடன் ஒருமித்த நிலைப்பாடே தம் மத்தியில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐ.தே.கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை என்ற நிலைப்பாடு ஐக்கிய மக்கள் சக்திக்குள் காணப்படுகிறது.

ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டுமெனக் கூறினார். நாமும் அதனையே குறிப்பிட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிய போதும் இரு தரப்பினருக்குமிடையில் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காணப்படவில்லை. சில செயற்பாட்டுகள் தொடர்பாக முரண்பாடுகள் மாத்திரமே காணப்பட்டன.

அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்க முடியாது.

அன்று ஜனாதிபதியை விமர்சித்த அனைவரும் இன்று பாராட்டுகின்றனர். எனவே, மக்களின் நிலைப்பாட்டுக்கமையவே நாம் செயற்பட வேண்டும். அதற்கமைய எவ்வாறு இணக்கப்பாட்டை எட்டுவது என்பது தொடர்பில் ஒருமித்து தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதாரத்துடன் ஏனைய அரச துறைகளும் அபிவிருத்தியடைந்து வருகின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.