40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானம் – காரணத்தை கூறுகிறார் காஞ்சன
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான கியூ.ஆர். ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (06) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சியங்களுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், அதன்பிறகு அனைத்து தனியார் களஞ்சியங்களுக்கும் குறித்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை