ஓமானியரின் கட்டான ஆடைத்தொழிற்சாலைக்கு விசேட அதிரடிப்படை, பொலிஸார் பாதுகாப்பு!

குழு ஒன்றினால் தாக்கப்பட்ட ஓமானியருக்குச் சொந்தமான கட்டானயிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் மேற்பார்வையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஆடைத்தொழிற்சாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

படல்கம பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆடைத்தொழிற்சாலையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஓமான் முதலீட்டாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதான தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.