யாழ். பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை (10) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை