தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை!
தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார் செல்லையா திருச்செல்வம் என்ற வயோதிபர்.
மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம், சிறுவயதிலிருந்தே இவ்வாறு வாகனங்களை இழுத்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலையத்திலிருந்து பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் வரையான இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்கு தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்துச் சாதனை படைத்து, வீரத்துக்கு முதுமை ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை