உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2025 வரை ஒத்திவைக்கும் நிலை!  ரேஹண ஹெட்டியாராட்சி தெரிவிப்பு

நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது.

தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாகத் தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பதற்கு தேர்தர் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது.

தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.

அத்துடன் நாட்டின் தேர்தல் சட்டம்இ அரசமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.

அதனால் நீதிமன்ற உத்தரவு ஒன்றைத் தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எமக்குத் தெரிகிறது.

ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இருக்கிறது. அதற்காக ஓகஸ்ட்இ செப்ரெம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன.

அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.