துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் நன்கொடை!

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரக்கிபே டெமெட் செகெர்சியோக்லுவிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறித்த நன்கொடையை கையளித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துரைத்த அமைச்சர், துருக்கி மக்களுடன் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யசோஜா குணசேகர, துருக்கிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.