எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு எதிரான நட்டஈட்டை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காத வகையிலேயே இந்த கையூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும், கப்பலின் காப்புறுதி நிறுவனத்தால் இந்த தொகை வைப்பலிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பாக ஆராயும் பொறுப்பை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு தாம் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.