ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 14 ரயில் சேவைகள் !
ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நேற்று (14) சுமார் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 12 குறுகிய தூர ரயில்கள் நேற்று காலை முதல் இயங்க திட்டமிடப்பட்டது.
இருப்பினும், போதிய பணியாளர்கள் இல்லாமையால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை