ரணிலே இவ்வருட புத்தாண்டு ஆணழகன்! – ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார
3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் – சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதாலே அது சாத்தியமாகியது. அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார்.
அத்துடன், இந்த அரசாங்கத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கப் போவதில்லை என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருப்பதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கான நிவாரண பணிகளை மறுக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமாக சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் –
தமிழ் – சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் 3 வருடங்களுக்கு பின்னரே சந்தோஷமான முறையில் கொண்டாட முடியுமான சூழல் ஏற்பட்டிருந்தது.
கடந்த 3 வருடங்களாக கொவிட் தொற்று மற்றும் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை இருந்தது. என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமையால் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ஓரளவேனும் கட்டியெழுப்ப முடிந்தமையாலே இது சாத்தியமாகியது.
அத்துடன், வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டிருக்காவிட்டால், இந்த முறையும் தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியாமல் போயிருக்கும். அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார்.
நாடு வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பொறுப்பானவர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால், ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் நாட்டை பொறுப்பேற்றார்.
கருத்துக்களேதுமில்லை