நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார்.

       

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.