யாழில் நடந்த கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் சாவு!
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.
இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை