குரங்குகளை ஏன் சீனாவிற்கு இலங்கை அரசாங்கம் அனுப்ப முயல்கின்றது? சூழல் ஆர்வர் சொல்லும் காரணம் என்ன?
உயிருடன் உண்பதற்காகவே இலங்கை அரசாங்கம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பவுள்ளமை தங்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சூழல் செயற்பாட்டாளர் நயன்ஹக ரன்வெல தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு சட்டத்தின் கீழ் பெருமளவு விலங்குகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதில்லை என உடன்படிககையில் நாங்கள் கைச்சாத்திட்டுள்ளதால் குரங்களை ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் அந்நிய செலாவணி பெருமளவில் கிடைக்காது தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகளும் இதன் பின்னால் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்குகள் உயிருடன் உள்ளபோது அவற்றின் மூளைகளை உண்ணும் விசேட உணவு முறை சீனாவில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை