கல்வித்துறையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஷியாம் பன்னஹக்க!

கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில கல்வித்துறையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் வாரத்திற்குள் உயர்தர விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரிபார்க்காவிட்டால் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு அத்தியாவசிய சேவையாக மாறினால் நன்றாக இருக்கும் என்பதே தங்களின் நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.