வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெறுபவரா நீங்கள் – தேசிய வருமான வரித் திணைக்களத்தின் அறிவிப்பு
வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
www.ird.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, அநுராதபுரம், கம்பஹா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்களில் இதற்காக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை