சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு!
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ள அவர், அதனை இராணுவத்திடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை