கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ‘குஷ்’ கஞ்சா மீட்பு

கொழும்பு, பேலியகொடயிலுள்ள  களஞ்சியம் ஒன்றில்  பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை  இன்று (25) கைப்பற்றியுள்ளது.

இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில்  மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில்  அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை  அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.