தென்மராட்சி முற்றாக முடங்கியது!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகரமும் கொடிகாமம் நகரமும் முற்றாக முடங்கியுள்ளன.
நகரத்தின் பிரதான சந்தைகள் வர்த்தக கட்டட தொகுதிகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளன. அதேபோல் தனியார் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தென்மராட்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்மையால் இயல்பு நிலை இழந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு சிலமாணவர்கள் பாடசாலைகள் இயங்காமையினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக உள்ளது.
கருத்துக்களேதுமில்லை