ஐந்துவயதில் தென்கொரியாவிலிருந்து ஆங்கிலம் தெரியாத சிறுமியாக வந்தவர் இன்று மிகத்திறமையான இராஜதந்திரி! ஜூலி சங்கிற்கு அன்டனி பிளிங்கென் பாராட்டு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் ஜூலி சங் தொடர்பாக இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சியோலில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஜூலி சங் 1977 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தவேளை அவருக்கு 7 வயது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை அவர் ஓர் ஆங்கிலவார்த்தை கூட தெரியாதவராக காணப்பட்டார். அவரது தந்தைக்கு பொறியல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவரது தாயார் இரவில் உணவகங்களில் கோப்பை கழுவினார். பின்னர் அவரது தாயார் ஒரு நூலகவியலாளர் ஆகவும் தேவாலயத்திலும் பணிபுரிந்தார் என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் விண்கலங்களில் 0 வளையங்கள் உறைவதை தடுக்க அவரது ( ஜூலி சங்கின்) அப்பா பின்னர் ஒரு வெப்பமாக்கல் அமைப்பை வடிவமைத்தார் அதுதான் சலஞ்சர் வெடிப்பை ஏற்படுத்தியது.
நாசா தனது விண்வெளி பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வழிகோலியது.
ஜூலி சங் முதன் முதலில் பிக்கரிங் பெலோ குழுவின் ஒருவராக இராஜாங்க திணைக்களத்தில் இணைந்தார். இது குறைந்தளவு பிரதிநிதித்துவம் பெற்ற சிறுபான்மையினத்தவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடாகும்.
இன்று ஜூலிசங்கின் தந்தையின் பொறியியல் நிறுவனம் அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஆர்மிட்டெஸ் உடன்படிக்கையில் இணைந்துள்ள ஏனைய நாடுகளுக்கு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் பொறிமுறையில் உதவிவருகின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதல் பெண் மற்றும் வெள்ளையினத்தவர் இல்லாத முதல் நபர் ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்பத்திற்கும் ஜூலியின் தந்தையின் நிறுவனமே உதவி.
ஒரு குடும்பத்தின் மூலம் அமெரிக்காவையும் தென்கொரியாவையும் பிணைக்கும் விடயம் இதுவென்றால் எங்கள் இரு நாடுகளையும் பிணைக்கும் விடயங்கள் எவ்வளவு ஆழமானவை என நினைத்துபாருங்கள் எனவும் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை