மல்லாவியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தொழிலாளர் தினம் !!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது
குறித்த மேதின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பவற்றுக் கெதிராக அடையாளங்களை தாங்கிய ஊர்தியுடன் மக்கள் வருகை தந்தனர்.
மேலும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தமிழர் கடல்,நில வளங்களை சுரண்டாதே, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்
அங்கு மக்கள் மத்தியில் மேதின பிரகடனம் வாசிக்கப்பட்டது அதேவேளை குறித்த பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்
கருத்துக்களேதுமில்லை