நவீன பயங்கரவாதிகளே அச்சமடைந்துள்ளார்கள்!  திலும் அமுனுகம இப்படிக் கருத்து

நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள். திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த தீர்மானங்களால் குறுகிய காலத்துக்குள் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும்,ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது.

ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில் உரிமை என்று குறிப்பிட்டுக் கொண்டு பேராசிரியர்கள் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நவீன பயங்கரவாதிகள் தான் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராகப் போர் கொடி தூக்கியுள்ளார்கள். திருத்தங்களின்றி இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினரது முறையற்ற செயற்பாடு ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.