நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்களாக்குவோம்! ஹரீன் பெர்னாண்டோ உத்தரவாதம்
சவால்களை ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் பயனில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள நீண்ட காலம் தேவைப்படும்.
நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம். சவாலை வெற்றிகாணெ;டு நாட்டை பொறுப்பேற்குமாறு எனது முன்னாள் தலைவருக்கு தெரிவித்தேன்.
என்றாலும் அவர் முன்வரவில்லை. அதனால்தான் நானும் மனுஷவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
எவர் ஒருவருக்கும் சரியான இலக்கு ஒன்று இல்லாதபோது அவர்களது பயணத்தை தொடர்வது கடினமாகும்.
ஜனாதிபதியின் உரை ஓர் இலக்கையும் நோக்கையும் கொண்டதாகக் காணப்படுகிறது. அதுதான் அரசியலில் நிகழ வேண்டிய மாற்றமாகும்.
25 வருட வேலைத்திட்டத்தை தயாரித்து பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க 6 தடவை பிரதமராக இருந்து செய்ய முடியாமல்போன அபிவிருத்தியை இப்போது எவ்வாறு செய்யப்போகிறார் என சிலர் எம்மிடம் கேட்கின்றனர்.
அவ்வாறு இல்லை. 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணில் இன்று ஜனாதிபதியாகி தனக்கான மைதானத்தை கட்டமைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.
மேலும் அன்று சவால்களை ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் பயனில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள நீண்ட காலம் தேவைப்படும்.
நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம். சவாலை வெற்றிகாணெ;டு நாட்டை பொறுப்பேற்குமாறு எனது முன்னாள் தலைவருக்கு தெரிவித்தேன்.
என்றாலும் அவர் முன்வரவில்லை. அதனால்தான் நானும் மனுஷவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
தந்தை திறமையானவர் என்பதற்காக மகன் திறமையானவராக இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. அந்த கட்சியில் இருக்கும் ஒருசிலர் அங்கு இருந்தாலும் அவர்களின் உள்ளம் இங்குதான் இருக்கிறது.
அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன் . இன்று வரையில் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சால் 2.5 பில்லியன் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள் மட்டுமே நமக்குப் போதுமானதல்ல.
எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். அதற்காக அவர் 2048 ஆம் ஆண்டு ஆகும்போது நாட்டை வெற்றிகொள்வார்.
இவற்றை நமக்காகவே செய்கிறார். இதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாக மாற்றியவரும் அவரேயாவார்.
எதிர்க் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கமாக இருந்தாலும் 2048 அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த 5 வருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.
அதற்காக நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்கள் ஆக்க வேண்டியது அவசியமாகும். நாம் இறந்துவிட்டாலும் நமது பிள்ளைகள் வாழ்வர் என்பதால் 2048 ஆம் ஆண்டு இலக்கை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு செயற்படுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை