இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து நம்பிக்கையுள்ளது – ஆனால் நெருக்கடியிலிருந்து இன்னமும் நாடு விடுபடவில்லை- அலி சப்ரி

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைவருக்கும் சமமானவையாக காணப்படவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதுவரை நம்பிக்கையளிக்ககூடிய சமிக்ஞைகள் தென்படுகின்றன ஆனால் இலங்கை இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலஙகையின் பொருளாதார மீட்சி சாத்தியமாவது குறித்து இலங்கை எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டுள்ளது என்ற கேள்விக்கு நம்பிக்கையின் ஒளிக்கீறுகள் காணப்படுகின்றன ஆனால் நாங்கள் இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நம்பிக்கைக்கு பல காரணங்கள் உள்ளன டொலர் நிலவரம் ஸ்திரமானதாக மாறியுள்ளமை,சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை 2022 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமை போன்ற காரணங்களால் இந்த நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி குறித்த மறுஆய்வு குறித்து இலங்கை எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் உள்ளது என்ற கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் நாட்டில் ஸ்திரதன்மை உணவு காணப்படுகின்றது தட்டுபாடுகளும் நீண்டவரிசைகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ள எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக மேற்கொள்ளவேண்டியப ல நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள அலி சப்ரி இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.