நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு !!

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிக் வோல்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு கனேடிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவு குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கனேடிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவு தொடர்பாக இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் இதன்போது இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.