டெங்கு ஒழிப்பு சிரமதானம்
(நூருல் ஹூதா உமர்)
நாட்டில் டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதுடன் மிக நீண்டகால விடுமுறைகளில் பாடசாலைகள் இருந்தமையால் மாணவர்களுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பாடசாலை அதிபர் எம்.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
இந்தச் சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அறுஸ்தீன் அவர்களின் பிரிவுக்கு உட்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் கலந்து கொண்டனர். அத்தோடு பாடசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து இந்தப் பணியினைச் சிறப்பாக செய்து முடித்தனர்.
கருத்துக்களேதுமில்லை