அமெரிக்காவின் சிறந்த சட்டக்கல்லூரி மாணவருக்கான விருதுக்கு இலங்கையரான டிலான் குணரத்ன பரிந்துரை!
2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்ட மாணவருக்கான விருதுக்கு டிலான் குணரத்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும்,டிலான் குணரத்னவின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் எனவும், அவர் கனடாவில் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ரொராண்டோவில் பணிபுரிந்த இவர், 75,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையை பெற்று ‘தென்மேற்கு’ சட்டக்கல்லூரியில் நுழைந்துள்ளார்.
இதற்கமைய, சட்டக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விசேட உரையை ஆற்றுவதற்கு டிலான் மஹேன் குணரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு சட்டக்கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவதற்கு இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
கருத்துக்களேதுமில்லை