கிணற்றில் விழுந்து இளம்பெண் சாவு!
யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பதிவாகியுள்ளது.
சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை