முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் முன்னோடி திட்டம்
பெட்ரோல் மூலமான முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி திட்ட ஆரம்ப விழா, பொரலஸ்கமுவ- வேரஹேரவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வியாழக்கிழமை (11) பிற்பகல் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அஸுசா குபோட்டார, மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை