யாழ். பாடசாலை மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!
யாழ். மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ளுமடைடள என்.ஓ.பி.கியு. 2023 என்னும் நிகழ்வு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
இக்கண்காட்சியில் பங்கெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவர்கள் வருகைதந்தனர்.
நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்ட மாணவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது, எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் யாழ். மாவட்டத்தின் பங்களிப்பு நாட்டுக்கு அவசியம் என்றும், தொழிற்கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டுமாறும் ஜனாதிபதி மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை