கொழும்பில் கோர விபத்தில் சிக்கி பலியான இளம் பெண்!
கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதுருகிரிய போர சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கெப் வண்டியுடன் மோதியதில் விபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சசினி யசோதா கிருஷ்ணரத்ன என்ற 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் போது விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹோமாகம, ஹபரகட, போதிராஜா மாவத்தையில் வசிக்கும் சசினி யசோதா, தனியார் வங்கி ஒன்றில் தொலைபேசி இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார்.
வீட்டில் இருந்து மாலம்பே நோக்கி சென்று கொண்டிருந்த போது, கோவின்ன மாவத்தையில் இருந்து அத்துரிகிரிய போர சந்திக்கு அருகில் பிரதான வீதிக்கு சென்று கொண்டிருந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை