கெப் ரக வாகனம் காழ்வாயினுள் வீழ்ந்து அநுராதபுரத்தில் விபத்து!
அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில், கெப் வாகனம் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் காணப்பட்ட கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தைச் செலுத்திச் சென்றவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மனைவிக்கு உணவு எடுத்துச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை