பல்கலை பேராசிரியர் என்பவர் யார்? மானியங்கள் ஆணைக்குழு விளக்கம்!

தகுதியில்லாதவர்கள் தம்மை பேராசிரியர்களாக காட்டிக்கொள்கின்ற நிலையில் பேராசிரியர் என்பவர் யார் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு, நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவால் அழைக்கப்பட்டபோது, இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த கோப் தலைவரான ரஞ்சித் பண்டார, மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிடம், சிலர் தங்களைப் பேராசிரியர்கள் என்று கூறுகின்றனர். உண்மையில் யாரை பேராசிரியர் என்று கூறிக்கொள்ள முடியும் என்று வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் அமரதுங்க, பேராசிரியர் என்பது ஒரு பதவி என்றும், பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகல் செய்த பிறகு அனைவரும் அதைப் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எனினும் ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னரும் தம்மை பேராசிரியர் என்று கூறிக்கொள்வதற்கு சில அளவுகோல்களைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்கான சுற்றறிக்கையை மானிய ஆணைக்குழு வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பல்கலைக்கழகத்தின் செனட், கல்வித்துறைக்கான குறித்த ஒருவரின் சேவையை ஆய்வு செய்த பிறகு, அவருக்கு எமரிட்டஸ் பேராசிரியர்( வாழ்நாள்) பதவியை வழங்குவதற்கான கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும், இது அவர்களை வாழ்நாள் முழுவதும் பேராசிரியராகக் குறிப்பிடும் உரிமையை அளிக்கிறது.

அந்த கௌரவம் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டார்.

இதன்படி வாழ்நாள் பேராசிரியர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஷ் மற்றும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார ஆகியோரை அழைக்க முடியும் என்று பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.

இதனையடுத்து சில கல்விப் பட்டங்களை யார் வைத்திருக்கலாம் என்பதை விவரிக்கும் நடைமுறை விதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.