ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்கத் தயார்!  சஜித் பிரேமதாஸ பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தால் அதற்கு ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் தன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அது ஜனநாயக ரீதியான செயற்பாடல்ல என்றும் ஜனாதிபதியினதும் , அவருக்கு ஆதரவளிப்பவர்களதும் தேவைக்கேற்ப தேர்தலை நடத்த முயற்சிப்பது தவறாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் சவாலை ஏற்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். சகல எதிர்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு , தேசிய கொள்கையை கேந்திரமாகக் கொண்ட பயணத்துக்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனவே ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகளை உருவாக்கிக் கொண்டிருக்காமல் நேரடியாக இது தொடர்பில் எம்முடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.