தமிழ் மக்கள் கொத்தாக கொல்லப்பட்டமைக்கு பிள்ளையார் சுழி போட்டவர்தான் பிள்ளையான்! மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லவக்குமார் சாட்டை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிள்ளையார் சுழி போட்ட சூத்திரதாரியாகக் காணப்படுகின்றார் என தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, விநாயபுரம் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ‘எங்களது எண்ணற்ற தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் தான் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்).

இவர் வாழைச்சேனை பேத்தாளை மண்ணைச் சேர்ந்தவர். தற்போது இராஜாங்க அமைச்சராகவும், அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருக்கின்றார். யுதத்தின் போது நாங்கள் எமது சகல உரிமைகளையும் இழந்துள்ளோம். ஆனால் தற்போது எழுந்து நிற்கின்றோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.