அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தத் தீர்மானம்! 

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

முடங்கிப் போன பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளை குறுகிய காலத்தில் அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியுமெனவும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.