பெருமளவிலான போதைப் பொருள்களுடன் பல நாள் மீன்பிடி கப்பலுடன் 6 பேர் கைது! 

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளனர்.

விசேட தேடுதல் நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருள்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (வியாழக்கிழமை) போதைப்பொருள் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.