இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக பொருள் கொண்டுவந்த இருவர் சிக்கினர்

இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடலட்டைகளைக் கொண்டுவருவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில் படகொன்றை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது 193 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள், 33 ஆயிரத்து 600 ஷாம்போ பக்கற்றுகள், 198 பாம் போத்தல்கள் மற்றும் ஒரு குளிரூட்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள், ஷாம்போ பக்கெற்றுகள், பாம் போத்தல்கள் மற்றும் குளிரூட்டி ஆகியன கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.