நிதி கையாளல், நுண்கடன்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் நிதி கையாளல் மற்றும் நுண்கடன்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்கின் வழிகாட்டலில் சாய்ந்தமருது விதாத வள நிலையத்தில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஐ.எம்.நாசர், மத்திய வங்கியின் திருகோணமலை கிளையின் முகாமையாளர் பி.நிரோசன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக விஞ்ஞான தொழிட் ப உத்தியோகத்தர் யு.எம்.முஸம்மில், பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் எம்.வி.நஸ்லா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் ஏ.அபிறா, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.எம்.நாஸிர் அலி மற்றும் எம்.ஐ.எப்.சுசான் சிஹ்னாஸ் எனப் பலரும் கலந்துகொண்டனர்
கருத்துக்களேதுமில்லை