கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை புதிய ஆளுநருக்கு பக்கபலமாக இருக்கும்! வாழ்த்துச்செய்தியில் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநருக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் –

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர்களாக இருந்தவர்களுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிர்வாகம் ஒன்றித்து செயற்பட்டு பிராந்திய சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாகச் செய்தோம். இப்போது புதிதாக கிழக்கு ஆளுநராக கடமையேற்றிருக்கும் செந்தில் தொண்டமானுடனும் ஒன்றிணைந்து செயற்பட்டு பிராந்திய சுகாதார மேம்பாடு, சுகாதாரத்துறை சார் வேலைத்திட்டங்களைச் செய்யத் தயாராக உள்ளோம்.

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை மேம்பாட்டுக்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் வழங்கவேண்டிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதுடன் கிழக்கு மாகாணத்தை சகல துறைகளிலும் முன்னேற்றமான மாகாணமாக கட்டியெழுப்ப புதிய ஆளுநர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்த அவர் புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.