கென்யோன் நீர்த் தேக்கத்தில் சுத்திகரிப்புப் பணிகள் தீவிரம்!

கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் லக்ஸபான நீர் மின் நிலைய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் கென்யோன் நீர்த் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய பணியாளர்கள் மூலமாக இந்த நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் நீர்த் தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் குழாய் வழியாக நீரை அகற்றி, அந்த நீர்த் தேக்கத்தில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு மீண்டும் நீர் நிரப்பும் பணி இடம்பெற்றுள்ளது.

இதன்போது அந்த நீர்த் தேக்கத்தில் நிறைந்து காணப்பட்ட, வனப் பகுதியில் இருந்துவந்த கழிவுகள், அப்பகுதி குடியிருப்பாளர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் போன்றவை அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.