வட்டுக்கோட்டை வயலுக்குள் பாய்ந்தது இ.போ.சபை பஸ்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைபகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை, பயணித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது.

அதிஷ்டவசமாக இ.போ.ச. பஸ் பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பஸ்ஸில் ஒரு சில இ.போ.ச ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பஸ்ஸை மீண்டும் வீதிக்கு கொண்டுவந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.