திருகோணமலை முதியோர் இல்லத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் விஜயம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 3 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தெரேசா முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போது முதியோர் இல்லத்தில் நினைவு நிகழ்வும் இடம் பெற்றது.
இதில் ஆளுநரின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை