கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக ஏ.சி.எம் பழில்!
கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதி சிறப்பு ஏ.சி.எம் பழில் இன்று(புதன்கிழமை) தனது பதவியைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆஸீக்,சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா,கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்களான ஏ.ஆர்.எம் சாலீஹ்.ஏ.சி.எம்.நஜீம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை