செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் இ.தொ.கா. குழுவினருடன் சந்திப்பு!
செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருடன் நேற்று (புதன்கிழமை) சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா.வின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை