திஸ்ஸவிதாரணவின் அலுவலக திறப்பை யாரோ எடுத்துச் சென்று விட்டார்களாம்!
கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள தனது அலுவலகத்தின் திறப்பை ஒருவர் எடுத்துச் சென்றதால் அந்த அலுவலகத்துக்குள் தன்னால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்பியபோது தெரிவித்தார்.
கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள அந்த அலுவலகத்திலிருந்து தான் தனது அனைத்து வேலைகளையும் செய்வதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சிறப்புரிமை தொடர்பில் குறிப்பிட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள பொருள்களும் இல்லாமலாகலாம் எனவும், இந்த நிலைமையை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை