கோட்டாபய கடற்படைத் தளத்தில் நடந்த பேச்சு நம்பிக்கை தருகிறது கடத்தொழிலாளர் சம்மேளனம் தெரிவிப்பு

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை தளத்தில் கிழக்கு பிராந்திய கடப்படை தளபதி உடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சு இடம்பெற்றதாக மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசப்பட்டதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முல்லைத்தீவு மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வி.அருள்நாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிதத பேச்சின்போது தமக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய பல விடையங்கள் வெளியிடப்பட்டதாகன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.