மீண்டும் டுபாய் பறந்தார் அலி சப்ரி ரஹீம் எம்.பி
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வெள்ளிக்கிழமை இரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார் எனக் கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருள்களையும் 91 கையடக்கத் தொலை பேசிகளையும் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 75 லட்சம் ரூபா அபராதம் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை