வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் ஆரம்பமாகின்றன! அமைச்சர் பந்துல தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள். – என்றார்.

ஏற்கனவே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பல வீதிகளை சீரமைக்காவிட்டால், எதிர்காலத்தில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாது என கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.