மீண்டும் மன்னிப்பு கேட்கிறார் ஜெரோம்!

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இந்து, பௌத்த, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பௌத்த மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதித்ததாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பாக சி.ஐ.டியும். விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு அவருக்கு எதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

முன்னதாக தனது அறிக்கையால் ஏதேனும் உணர்வுகள் புண்பட்டிருந்தால், அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.